நடிகர் விஷால் பாஜகவுக்கு ஆதரவா

by Staff / 06-11-2022 04:21:01pm
  நடிகர் விஷால் பாஜகவுக்கு ஆதரவா

தமிழ் நடிகர் விஷால் சமீபத்தில் மோடியை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “காசியை புதுப்பித்து சிறபாக மாற்றியதற்கு மோடிக்கு நன்றி’ என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மோடியும், காசியில் அற்புத அனுபவம் உங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என பதிலளித்திருந்தார். இந்நிலையில் விஷால் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது.இதுகுறித்து பதிலளித்த விஷால், மோடிக்கு நன்றி கூறியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. தாஜ்மஹாலை பார்க்கும்போது எப்படி ஷாஜகானை நினைப்போமோ அதேபோல் காசி நகரை பார்க்கும்போது மோடிக்கு நன்றி தெரிவிக்க தோன்றியது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via