நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

by Editor / 10-11-2022 09:21:09pm
 நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு வழியாக சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவுக்கு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் விதான் சவுதாவுக்கு வருகிறார்.

பிறகு எம்.எல்.ஏ.க்கள் பவனுக்கு வந்து அங்குள்ள கனகதாசர், வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அவர் அங்கிருந்து கார் மூலம் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வருகிறார்.

அங்கு காலை 11 மணியளவில் சென்னை - மைசூரு வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அத்துடன் அதே இடத்தில் பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

 

Tags :

Share via