மதுரை - கோயம்புத்தூர் ரயில் போத்தனூர் வரை செல்லும்

by Editor / 11-11-2022 09:12:39pm
மதுரை - கோயம்புத்தூர் ரயில் போத்தனூர் வரை செல்லும்

சேலம் கோட்டத்தில் போத்தனூர் - கோயம்புத்தூர் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக பழனி வழியாக இயக்கப்படும் மதுரை - கோயம்புத்தூர்  விரைவு ரயில் (16722) நவம்பர் 16 முதல் டிசம்பர் 8 வரை கோயம்புத்தூர் அருகே உள்ள போத்தனூர் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721) வழக்கம் போல கோயம்புத்தூரில் இருந்து இயங்கும்.

 

Tags :

Share via