கல்லூரி பேராசிரியர் தற்கொலை

by Staff / 12-11-2022 05:05:24pm
கல்லூரி பேராசிரியர் தற்கொலை

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் விஸ்தரிப்பு வசந்தநகரை சேர்ந்தவர் ஆனந்த நாராயணன் ( வயது 63). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவரது மனைவி தேவி (வயது 62) இவர் சுற்றுலா துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரே மகள் உள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு நடந்த விபத்தில் அவரது மகள் இறந்துவிட்டார். இதில் மன அழுத்தத்தில் ஆனந்த நாராயணன் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் மின்விசிறியில் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்குப்பதிவு சாரணை நடத்தி வருகிறார்

 

Tags :

Share via