40% வரை சுங்க கட்டணத்தை குறைக்க முடிவு..?

by Editor / 18-11-2022 11:13:31pm
40% வரை சுங்க கட்டணத்தை குறைக்க முடிவு..?

இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. இதனால் நடுத்தர மக்களும், ஏழை மக்களும், வணிகர்களும், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்.

இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் எம்பி வில்சனுக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து திமுக எம்பி வில்சன் தனது ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.


அதற்கு தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், நெடுஞ்சாலைககளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணமானது, பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிறிய கட்டணமாக வசூலித்துக் கொள்ள ஆவண செய்யுமாறு மத்திய அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via