நிதியை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிய உறுப்பினர் அமலாக்கத்துறை நடவடிக்கை.

by Editor / 22-11-2022 08:32:33am
நிதியை தனது வங்கி கணக்கிற்கு மாற்றிய உறுப்பினர்  அமலாக்கத்துறை நடவடிக்கை.

செஞ்சிலுவை சங்கத்தின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை.கடந்த 2020 ஆம் ஆண்டு செஞ்சிலுவை சங்கத்திற்கு வந்த நிதியை அதன் உறுப்பினர் ஒருவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிவர்தனை தொடர்பாக அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.விசாரணையில் செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸ்ருதீன் ஆகியோர் நிதியை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டது தெரிய வந்தது.இதை எடுத்து அவர்களின் மூன்று புள்ளி 3.37 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via