சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி

by Staff / 01-12-2022 01:01:44pm
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி

பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுடனான நேற்றைய சந்திப்பிற்கு பின், தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைப்பெற உள்ளது. அதுவும் சென்னையில் வரும் ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது. இக்கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிகிறது.

 

Tags :

Share via

More stories

Logo