யுபிஐ மூலம் ரூ.11.90 லட்சம் கோடி பண பரிவர்த்தனை

by Editor / 03-12-2022 04:02:31pm
யுபிஐ மூலம் ரூ.11.90 லட்சம் கோடி பண பரிவர்த்தனை

இந்தியா முழுவதும் பண பரிவர்த்தனைகளுக்கு ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் அதிக அளவில் பயனில் உள்ளன. இந்நிலையில் இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுபிஐ செயலிகளுக்கு டிசம்பர் 2024ம் தேதி வரை எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.11.90 லட்சம் கோடி பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via