மதுரை மாட்டுத்தாவணி காய்கறி கடைகள் வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் கடையடைப்பு.

by Editor / 07-12-2022 08:49:43am
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி கடைகள் வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் கடையடைப்பு.

மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி காய்கறி கடைகளின்  வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 60 சதவீத கடைகள் கடையடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.வாடகை உயர்வை கண்டித்து 4 சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் 60 சதவீதம் கடைகள் அடைப்பு.சில்லறை வணிகம், பழங்கள் விற்பனை கடைகள் வழக்கம் போல இயங்குகின்றது,மதுரை மாநகராட்சி சார்பில் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சந்தை இயங்கி வருகிறது.இச்சந்தையில் உள்ள 1,836 கடைகளில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 10,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இச்சந்தைக்கு ஆந்திரா, கருநாடகா மற்றும் தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,000 டன் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது.தற்போது மதுரை மாநகராட்சி இக்கடைகளின் வாடகையினை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்திவருகின்றன.

 

Tags :

Share via