தன்னம்பிக்கை மிகவும் அவசியம். 

by Editor / 11-12-2022 09:46:45am
தன்னம்பிக்கை மிகவும் அவசியம். 


நாம் வாழும் வாழ்க்கையை சிறப்பாக செயல்படுத்த தன்னம்பிக்கை மிகவும் அவசியம். 

●ஆயிரம் தோல்விகளை நீ ஒரு விஷயத்தில் அடைந்தாலும் சற்றும் சளைக்காத போராட்ட குணம் ஒன்று உன்னிடம் இருக்குமேயானால் உன் போல வெற்றியாளன் இந்த உலகில் இன்னும் உருவாகவில்லை.

●நல்லது எது கெட்டது எது என்பதை யார் சொன்னாலும் அனைவரின் கூற்றையும் நீ நம்பலாம், அனால் ஆராய மட்டும் மறந்து விடாதே. உன் சுய சிந்தனையை முடக்கி விடாதே.

●நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம். நம்பிக்கையோடு இருப்பவன் வீழ்வது கடினம்.

●எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.

●தோல்வியும், வெற்றியும் நம் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அன்றி என்றுமே நிலையானது அல்ல.. நிரந்தரமும் அல்ல.

●தன்னம்பிக்கை என்ற ஒன்றை உன்னிடம் இருந்து சீர்குலைக்கும் உயிர் கொல்லி நோய் தான் அச்சம். அதை போக்கும் மருந்தே தைரியம்.

●ஒரு காரியம் செய்து முடிக்கும் முன்னரே தயங்கி நிற்பவனை வாழ்க்கை என்றுமே ஆதரிப்பது இல்லை.

●எந்த ஒரு வேலைகளிலும் நீ  காலம் தாழ்த்துவது என்பது தோல்வி அடைய, அந்த தோல்வியிடமே தோல் கொடுப்பதற்கு சமம்.

●காலம் என்றுமே உனக்காக நிற்காது. நீ தான் காலத்திற்கு தகுந்த மாதிரி உன்னுள் மாற்றத்தை வெளிக்கொணர வேண்டும்.
 

 

Tags :

Share via