பாரதியின் கனவை நினைவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்-பிரதமர் மோடி ட்வீட்

by Editor / 11-12-2022 04:56:38pm
பாரதியின் கனவை நினைவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்-பிரதமர் மோடி ட்வீட்

இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த இவர், தமிழ், தமிழர் நலன், சாதிய மறுப்பு, பெண் விடுதலை, இந்திய விடுதலை உள்ளிட்ட பலவற்றிற்காக குரல் கொடுத்தவர்.

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்களும் பாரதியாரை நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மகாகவி பாரதியாரை புகழ்ந்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “மிகப்பெரிய ஆளுமையான சுப்பிரமணிய பாரதியை அவரது பிறந்த நாளில் வணங்குகிறேன். ‘மகாகவி பாரதியார்’ குறிப்பிடத்தக்க தைரியத்தையும், சிறந்த அறிவாற்றலையும் கொண்டிருந்தார். இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறித்தும்,  ஒவ்வொரு இந்தியனின் வளர்ச்சியைக் குறித்தும் அவர் மிகப்பெரிய கனவு கண்டிருந்தார். பல்வேறு துறைகளில் அவரது எண்ணங்களை நிறைவேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via