ஏழை மக்களையும்.. விமானத்தில் பறக்க வைத்தது பாஜக ஆட்சி தான்.. மோடி

by Staff / 12-12-2022 01:39:02pm
ஏழை மக்களையும்.. விமானத்தில் பறக்க வைத்தது பாஜக ஆட்சி தான்.. மோடி

பாஜக ஆட்சிக்கு முன்பு வரை பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் செல்லும் சூழல் இருந்தது; ஆனால், எனது தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சாதாரண எளிய மக்கள் கூட விமானத்தில் செல்வது சாத்தியமாகியுள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்ட்ராவில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.75,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்அதன் பின்னர், கோவாவுக்கு சென்ற மோடி, அங்கு ரூ.2,870 கோடியில் கட்டப்பட்ட நவீன விமான நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மோடி ஜெயிக்க வேண்டும் அப்படிங்கற வெறி காங்கிரஸிடம் இல்லை இந்தியாவின் அடையாளம் மோபாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நவீன விமான நிலையம், கோவாவுக்கு மட்டுமல்ல இந்தியாவின் அடையாளமாகவே மாறப் போகிறது. அந்த அளவுக்கு சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விமான நிலையத்தால் கோவாவின் சுற்றுலா வருமானம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எளிய மக்களுக்கும் விமானப் பயணம் இந்தியாவை பொறுத்தவரை, விமானத்துறையின் வளர்ச்சியை பாஜகவுக்கு முன், பாஜகவுக்கு பின் என இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். எனது தலைமையிலான பாஜக ஆட்சி அமைவதற்கு முன்பு வரை (2014-க்கு முன்) விமானம் என்றாலே அது பணக்காரர்கள் செல்லும் ஊர்தி என்ற எண்ணமே நாட்டு மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், 2014-க்கு பிறகு இந்த எண்ணம் தலைகீழாக மாறியது. விமானப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பல மடங்கு குறைக்கப்பட்டன. உதான் திட்டத்தின் கீழ் ஏராளமான மலிவு விலை விமான நிலையங்களும் அமைக்கப்பட்டன. இதனால் ஏழை, எளிய மக்களும் செல்லக்கூடிய ஒன்றாக விமானங்கள் மாறின. 8 ஆண்டுகளில் 72 விமான நிலையங்கள், ஆனால்.. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 முதல் 2014-ம் ஆண்டு வரை வெறும் 70 விமான நிலையங்கள் தான் கட்டப்பட்டிருந்தன. ஆனால் எனது தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 72 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டன. அதாவது 70 ஆண்டுகளில் 70 விமான நிலையங்களை மட்டுமே முந்தைய ஆட்சியாளர்களால் கட்ட முடிந்தது. ஆனால், 8 ஆண்டுகளிலேயே நாங்கள் 72 விமான நிலையங்களை கட்டியிருக்கிறோம். இதுதான் பாஜகவுக்கும், மற்ற கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் மக்கள் வளர்ச்சியே பாஜகவுக்கு முக்கியம் முன்பு ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. வாக்கு வங்கி அரசியலை கையில் எடுத்து, அதன் மூலம் ஆட்சியில் அமர்ந்து ஆதாயம் பெற்று வந்தனர். எனவே, ஆட்சியில் இருக்கும் வரை அவர்கள் சம்பாதிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. அப்படி இருக்கும்போது, அவர்கள் எப்படி மக்கள் நலனை பற்றி சிந்திப்பார்கள்? ஆனால், பாஜகவோ வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் கட்சி அல்ல. மாறாக, மக்கள் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்ட கட்சி. எனவேதான், மக்களுக்கான நலத்திட்டங்கள் பாஜக ஆட்சியில் ஏராளமாக மேற்கொள்ளப்படுகின்றன. 
 

 

Tags :

Share via