தானம் எத்தனை வகை -கிருஷ்ண பராமத்மா அர்ஜீனனுக்கு கூறியது.

by Admin / 14-12-2022 02:10:39pm
தானம் எத்தனை வகை -கிருஷ்ண பராமத்மா அர்ஜீனனுக்கு கூறியது.


அர்ஜீனனுக்கு கீதா உபதேசம் செய்யும் பொழுது பல வினாக்களைத்தொடுத்த பொழுது," தானம் எத்தனை வகையில்செய்யப்படுகிறது என்று கேட்க,அதற்கு பகவான் கிருஷ்ணர்,"தானம் செய்வது நம் கடமை என்று நினைத்து எந்தவிதமானதானம்,எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்  என்றும்,தானம் பெறுபவர்களின் நலனை மனதில் கொண்டும்.பிரதிபலன் எதிர்பார்க்காமல் சுயநலம் கருதாமல் கொடுக்கப்படும் தானம் சிறப்பு மிக்க சாத்வீக தானம் எனப்படும்.
      மன வருத்தத்தோடும் கைமாறு கருதியும் கொடுக்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும்.
      எந்த தானம் மரியாதை இன்றி இகழ்ச்சியோடு,தகாத இடத்திலும்,தகாத காலத்திலும்,தகுதி அற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டால் அது தாமசம் எனப்படும்.
அர்ஜீனன் மீண்டும்  தம் சந்தேகத்தை,"எப்படிப்பட்டவர்களுக்கு தானம் கொடுக்கக்கூடாது."
பகவான் அதற்கு,"கபட வேஷம் போட்டிருப்பவன்.பிறருக்கு துன்பத்தை கொடுப்பவன்,அடுத்தவர்களைத்தகாத வார்த்தைக ளால் குறை கூறுபவன்,பொய்பிரச்சாரம் செய்பவன்,பிறர் வாழ்க்கையை கெடுத்து வாழ்பவன்.திருடுபவன்,ஏமாற்றுபவன்,சூதாடுபவன்,நயவஞ்சகன்போன்றவர்களுக்கு தானம் வழங்கக்கூடாது."
"அப்படிப்பட்டவனர்களுக்கு தானம் கொடுப்பதால் தானம் கொடுப்பவனுக்கு மிகுந்த பாவம் ஏற்பட்டு நரகத்தை அடைவான்.ஆனால்,பசியில் உள்ளவன் ,ஆடையற்றவன்.நோயாளி போன்றவர்கள் அது யாராக இருந்தாலும்,அவர்களுக்கு உணவு,உடைகள் ,மருந்துகள்போன்றவற்றைக்கொடுக்கலாம்.அவ்வாறு கொடுப்பதால் கொடுப்பவனுக்கு நன்மையேஉண்டாகும் .நாம் செய்யும் வேள்விகள்,தவம்,பூைஜகள் போன்ற செயல்களை நாம் சிரத்தையுடன் செய்ய வேண்டும்.நமக்கு சிறிதும் கஷ்டம் இல்லாமல் நல்ல காரியம் செய்தால் அதை செய்பவர்களுக்கு பயனை அளிக்காது.எந்த மனிதன் கர்மத்தை வெறுப்பதில்லையோ,எந்த மனிதன் பலனை எதிர்பார்பக்காமல் கர்மத்தை செய்கிறானோ அவனே அவனே உண்மையான தியாகியும் அறிஞனும் ஆவான்."

 

Tags :

Share via