கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

by Editor / 26-04-2023 08:31:28pm
கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கடத்திக் கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், அதனை கண்டு கொள்ளாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திக்கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், கேரளாவிற்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்டு வரும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த கோரி ஏராளமான இயற்கை வள பாதுகாப்பு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இருந்த போதும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திக் கொண்டு செல்லப்பட்டு வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தற்போது இந்த இயற்கை வள கடத்தல் சம்பவங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் கட்டுக்கடங்காத அளவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையான கண்டனத்துக்குரியது எனவும், அறிய இயற்கை வளங்களை அற்ப லாப நோக்கத்திற்காக அரசு கூறு போட்டு விற்பது என்பது ஏற்க முடியாத பெரும் கொடுமையாகவும் எனவும், தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், மேலும் பள்ளி, கல்லூரி நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

குறிப்பாக, கனிம வள கொள்ளைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் சூழலிலும், நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் தொடர்ந்து கனிம வளங்கள் ஆனது கேரளாவிற்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்டு வருவது வேதனை தரும் செயலாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via