தென்காசி, கோவை உள்ளிட்ட  6 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு

by Editor / 15-08-2021 05:26:17pm
 தென்காசி, கோவை உள்ளிட்ட  6 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு

 

தென்காசி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 16.08.2021 முதல் 18.08.2021 வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


19.08.2021 அன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. சிதம்பரம், கடலூரில் தலா 5 செ.மீ மழை பெய்துள்ளது. 15.08.2021 மற்றும் 16.08.2021 அன்று தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.


15.08.2021 முதல் 19.08.2021 வரை மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via