சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை: பிரேமலதா

by Staff / 09-09-2023 05:06:00pm
சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை: பிரேமலதா


கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் "இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சியின் கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள்?, தேர்தல் ஆணையம் அதை ஏற்றக்கூடாது. மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர, சனாதன அரசியல் மக்களுக்கு தேவையில்லை" என்று திமுகவை விமர்சித்த அவர், லஞ்சம், ஊழல், டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் அறிவிப்போம் என்று கூறினார்.

 

Tags :

Share via