19 ஆம் தேதி அறிவாலயத்தில் ஆலோசனைக்கூட்டம் 

by Editor / 16-08-2023 06:14:37pm
19 ஆம் தேதி அறிவாலயத்தில் ஆலோசனைக்கூட்டம் 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக  நடத்துவது குறித்து வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக உறுப்பினர்கள், அனைத்து அணிச் செயலாளர்கள், அமைச்சர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via