சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய நாய்

by Staff / 19-12-2022 12:08:02pm
சிறுமியின் முகத்தில் கடித்து குதறிய நாய்

ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று, பக்கத்து வீட்டு சிறுமியான 9 வயது நிரம்பிய மஹியை கடித்து குதறியுள்ளது. அவரது முகம் மற்றும் காதுகளில் பலமாக கடித்துள்ளது. பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை விரைவில் செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via