திருவிழாவில் தலைதெறிக்க ஓடியயானை

by Editor / 10-10-2021 10:20:04am
திருவிழாவில் தலைதெறிக்க ஓடியயானை

கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழாவின் போது பட்டாசு சத்தத்தை கேட்டு யானை மிரண்டதால் , பொதுமக்கள் அலறியடித்து ஓடினர் .

மைசூரிலும், மாண்டியாவிலும் தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் . மைசூரில் தசரா விழா கொண்டாடப்படுவதற்கு , மூன்று நாட்களுக்கு முன்பே மாண்டியாவில் உள்ள சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழா நடைபெறும் .

அதன்படி , மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழாவுக்கான சாமி ஊர்வலம் நடைபெற்றது . அம்மனை தங்க அம்பாரியில் வைத்து யானை சுமந்துசென்ற போது விழாவில் பட்டாசுகள் வெடிக்கப் பட்டன .தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததால் யானை மிரண்டது . பிறகு திடீரென மதம் பிடித்ததை போல் யானை பிளிறியதால் , ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் .மிரண்டு போன யானையை அருகிலிருந்த கும்கி யானையை கொண்டு ஆசுவாசப்படுத்தினர் . பாகனும் அதை கட்டுக்குள் கொண்டு வந்தார் . யானை அமைதி நிலைக்கு திரும்பியதால் , சாமி ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது .

 

Tags :

Share via