வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு

by Staff / 19-12-2022 04:03:24pm
வெல்ல ஆலைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், நாலுகால்பாலம், டேனிஷ்பேட்டை, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, பேளூர், உள்ளிட்ட பகுதிகளில் 300–-க்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி இந்த ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வெல்லம் தயாரிக்கும் போது, செயற்கை நிறமூட்டி களை கொண்டும், சர்க்கரை கலந்தும் வெல்லம் தயாரிக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலைகள் செயல்பட்டு வரும் பகுதிகளில், அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆய்வில், 4 ஆலைகளில் இருந்து ரூ. 4. 31 லட்சம் மதிப்புள்ள 12, 700 கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு ஆலையிலிருந்து செயற்கை நிறமூட்டிகள் கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் ஆகும். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெல்ல மண்டிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்ப டும் வெல்லங்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டுவருகிறது. ஆய்வில், கலப்படம் செய்யப்பட்டு இருப்பது உறுதியானால் , அந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக சர்க்கரை, ஹைட்ரோஸ், சூப்பர் பாஸ்பேட், ப்ளீச்சிங் பவுடர் போன்ற ரசாய னங்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்புத் துறை சட்டம் 2006- ன் படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ". இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags :

Share via