பரந்தூர் விமான நிலையம் இன்று அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம்.

by Editor / 20-12-2022 08:58:01am
 பரந்தூர் விமான நிலையம் இன்று அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், விமான நிலையம் அமைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் கிராம பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via