உடலுக்கும் மனதிற்கும் புத்திக்கும் புலன்களுக்கும் விருப்பமானது கிடைத்தால்......

by Admin / 23-12-2022 10:09:07am
உடலுக்கும் மனதிற்கும் புத்திக்கும்  புலன்களுக்கும் விருப்பமானது கிடைத்தால்......

அர்ஜீனன் -."ஞானியர் என்பவர் யார்.?
கிருஷ்ணர்.-"பரமாத்மாவைப்பற்றிய உண்மை அறிவை பெற்றவர் ஞானி ஆவார்.
அர்ஜீனன் .-"கர்மங்களை செய்வது என்றால் என்ன.?
கிருஷ்ணர்-பல தலைமுறைகளாக காப்பாற்றப்பட்டு வரும் சடங்குகள்.பூைஜகள்,கடமைகளை தவறாமல் செய்வது
கர்மங்கள் எனப்படும்.மகன்,தாய்-தந்தையருக்கு சேவை செய்ய வேண்டும்.மனவைி,கணவனுக்கு சேவை புரிய வேண்டும்.
சிஷ்யன் குருவிற்கு சேவை புரிய வேண்டும்.
"மேலும் நமது பெரியோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சடங்குகள்,விரதம்,பூைஜகள்,இவற்றில் குறைபாடுகள்,இல்லாமல் செய்து முடிக்க வேண்டும்.இதுவே கர்மங்கள் ஆகும்."
அர்ஜீனன்-விருப்பமான பொருள் கிடைத்தால் மகிழ்வது. விரும்பதாகதது கிடைத்தால் வெறுப்பது என்றால் என்ன?.
கிருஷ்ணன் -உடலுக்கும் மனதிற்கும் புத்திக்கும்  புலன்களுக்கும் விருப்பமானது கிடைத்தால்,அது தனக்கு வேண்டும் என்பார்கள்.அவற்றை அடைந்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.ஆனால்,ஞானிக்கு எந்த ஒரு பொருட் மீதும் பற்று கிடையாது.ஞானிகளின்உடல்,மனம்,புத்தி மற்றும் புலன்களுக்கு அனுகூலமான பொருள்கிடைத்தால் அதற்காக-"உடலுக்கும் மனதிற்கும் புத்திக்கும்  புலன்களுக்கும் விருப்பமானது கிடைத்தால்,
அவர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை.ஏனென்றால்,அவர்களின் மனம்,உடல்புலன்கள்,இவற்றின் மீது பற்று கொள்வதில்லை.
மனதை எவ்வாறு கட்டுப்படுத்துவது.-?
கிருஷ்ணன்.-"மனம் நிலைத்து நிற்காமல் அவை பாய்ந்து கொண்டே இருக்கும்.அது மதம் பிடித்த யானையைப்போல்
நமது மனம்,கர்மம் கொண்டு தவறான வழியிலே சென்று விடுகிறது.மனம் எதை விரும்புகிறதோஅதன் யீது மோகம் கொண்டு விடுகிறது.மனதை அடக்குவதென்பது காற்றை அடக்குவதற்கு சமமானது..அதை அடக்குவது கடினமான செயல்.
கடினமான தியானங்கள் மூலமாக மனதை கட்டுப்படுத்தலாம்.அப்போது ஆசன முறையில் அமைதியாக அமர்ந்து கடவுளையே நினைத்து தியானம் செய்ய வேண்டும்.எல்லாம் கடவுள் செயல் என்றஎண்ணம் மனதில் நிலைக்க வேண்டும்.
அர்ஜீனன்-"சன்னியாசம் என்றால் என்ன.?"
கிருஷ்ணர்-"மனிதன் எல்லாவிதமான ஆசைகளையும் தியாகம் செய்வது சன்னியாசம் ஆகும்.மனைவி,மக்கள்,உடல்,மனம்,
சொல்,பொருள்,செயல் போன்றவற்றிலுள்ளஎல்லா ஆசைகளையும்முழுமையாக துறப்பது சன்னியாசம் ஆகும்.வெறுப்பு,விருப்புகளைக்கடந்து கர்மங்களை,கடமைகளை கடந்து  வாழ்பயாவவன் சன்னியாசியை லிட மேலானவன்."

 

Tags :

Share via