அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு  ரூபாய் 1000 ஊக்கத்தொகை  

by Editor / 28-06-2021 08:12:26pm
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு  ரூபாய் 1000 ஊக்கத்தொகை  


தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பல மாவட்டங்களிலும் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் ரூபாய் 1000 கூட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


 
 Post Views: 0

 

Tags :

Share via