கோவில்பட்டி கோட்டத்திலுள்ள தாலுகாக்களில் வி.ஏ.ஓ.க்களின் செயல்பாடு மோசமாக உள்ளதாக ஆர்.டி.ஓ.வேதனை.

by Editor / 08-05-2023 10:55:19pm
கோவில்பட்டி கோட்டத்திலுள்ள தாலுகாக்களில் வி.ஏ.ஓ.க்களின் செயல்பாடு மோசமாக உள்ளதாக ஆர்.டி.ஓ.வேதனை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட  கோவில்பட்டி, எட்டையாபுரம் ,விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு கூடுதல் பணியாக அந்தந்த கிராமங்களில் வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஆதார் அட்டை வங்கி கணக்கு ஆகியற்றுடன் கணினியில் ஏற்றுவதற்கு வாய்மொழி உத்தரவாக ஆணை இடப்பட்டதாக தெரிகிறது .ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியினை சரிவர செய்யாமல் விவசாயிகளின் விவரங்களை கணினி ஏற்றுவதில் மெத்தனப்போக்கு  காட்டி வருவதாக கோட்டாட்சியர் மகாலட்சுமி  தெரிவித்துள்ளார்.

எட்டயபுரம் தாலுகாவில் 49 ஆயிரத்து 500 விவசாயிகள் விவரங்களை கணினியில் பதிவு செய்யாமலும், ஓட்டப்பிடாரத்தில் 86 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளின் விவரங்கள் , விளாத்திகுளத்தில் ஒரு லட்சத்து 19000 க்கும் அதிகமான விவசாயிகளின் விவரங்களையும்  கோவில்பட்டியில் 57,000 விவசாயிகளின் விவரங்களையும், கயத்தாறில் 80,000 விவசாயிகளையும்  கணினியில் பதிவு செய்யாமல் இருந்துருவதாகவும் தெரிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா திருச்செந்தூர் தாலுகா ஏரல் தாலுகாவை ஒப்பீடுகையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளை கணக்கெடுத்து கணினியில் பதிவேற்றம் செய்யும் வேலையை ஒரு கிராம நிர்வாக அதிகாரி ஒரு நாளைக்கு 100 பதிவேற்றம் செய்தால் கூட இந்நேரத்தில் தங்களது இலக்கை நிறைவேற்றி இருக்கலாம் அலுவலகத்தில் உட்கார்ந்து அப்படி என்னதான் வேலை செய்கிறீர்களோ? நான் பார்த்ததிலே கோவில்பட்டி டிவிசன் படு மோசமாக உள்ளது நானும் பலமுறை தாசிதர்களிடம் எடுத்து கூறிவிட்டேன் எந்த பலனும் இல்லை விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்ய காலதாமதம் ஆனால் வரும் 16ஆம் தேதி நடக்க இருந்த சமபந்தி இருபதாம் தேதிக்கு அப்புறம் நடந்தாலும் பரவாயில்லை அதுவரை எந்த கோப்புகளும் கையெழுத்து இட மாட்டேன் நான் பார்த்ததிலே கோவில்பட்டி டிவிஷனில் உள்ள தாலுகா அலுவலகங்கள் படும் மோசமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தனது பேச்சில் கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசி உள்ளதாகவும் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி எங்களுக்கு அரசாணைப்படி கொடுக்கப்படவில்லை என்றும் வாய்மொழி உத்தரவாகவே இந்த உத்தரவு செயல்படுத்த சொல்வதாகவும்  வேதனைப்படுகிறனர்.  விவசாயிகளின் விவரங்களை பதிவிடும் பணியை முடித்து தர வேண்டும் என்றும் அரசு அலுவலர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் விவசாயிகளை கணக்கெடுத்து பதிவேற்றும் செய்யும் பணியினை வருவாய்த்துறை அலுவலர்கள் விரைவாக பதிவேற்றம் செய்து கொடுத்தால் தான் விவசாயிகள் தங்களுக்கு வரவேண்டிய மானியத்தை பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்றும்  விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

 

Tags :

Share via