அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு 50அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி மீட்பு. 

by Editor / 29-12-2022 10:26:21pm
அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு 50அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி மீட்பு. 

அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு 50அடி பள்ளத்தில் விழுந்த சிறுமி மீட்பு. 

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும்  நீர்வரத்து அதிகரித்துக் கொட்டி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், தற்போது பள்ளிகளுக்கு தேர்வு விடுமுறை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர், இந்த நிலையில் இன்று பாலக்காடு பகுதியில் இருந்து கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினரோடு கோவை வழியாக குற்றாலம் சுற்றுலா வந்து பழைய குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களது நான்கு வயது குழந்தை ஹரிணி தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்தவர் திடீரென அருவி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இதனை யாரும் கவனிக்கவில்லை இந்த நிலையில் அந்தப் பகுதியில் சிறுமி ஒருவர் விழுந்ததை தூரத்தில் இருந்து பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து  கூச்சலிட்டனர் இதன் தொடர்ச்சியாக அங்கு குளித்துக் கொண்டிருந்த சிலர் குழந்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர், ஆழமான பள்ளமான பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் சிலர் மிகுந்த எச்சரிக்கையோடு அருவி தண்ணீர் ஓடும் பகுதியில் இறங்குவதற்கு  பாதை தெரியாமல் திணறிய நிலையில்  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சார்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் தனது உயிரையும் பணயம் வைத்து சிறுமியை மீட்பதற்காக பழைய குற்றாலம் அறிவிப்பகுதியின் பாறைகள் வழியாக பள்ளமான பகுதியில் உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்ற பாறைகள்  வழியாக இறங்கிய அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பாறை நீரில் சிக்கிக்கொண்டிருந்த சிறுமியை பத்திரமாகமீட்டார், இதனை தொடர்ந்து ஏராளமானவர்கள் அந்த பாதையில் இறங்கி இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.அவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர் சிறுமியை பத்திரமாக மீட்ட விஜயகுமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன மேலும் அருவி நீரில் அடித்து செல்லப்பட்டு 50 அடி உயரமுள்ள பள்ளத்தில் விழுந்த சிறுமியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பெற்றோருடன் புறப்பட்டு சென்றார்.

 

Tags :

Share via