திருக்குற்றால நாதர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது,

by Editor / 01-01-2023 02:00:11pm
திருக்குற்றால நாதர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது,

  குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடத்துவது. வழக்கம் இந்த ஆண்டு திருவிழா கடந்த 28 ஆம் தேதி காலை 5.20-6.20 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவில் ஜனவரி 1ம் தேதியான இன்று  காலை 8 மணிக்கு மேல் உலகிலேயே உள்ள ஆலயங்களில் ஐந்து தேர்கள் ஓடும் தேரோட்டம் நடைபெற்றது.முதலில் விநாயகர் தேர்,இரண்டாவது முருகர்தேர்,3வதாக  நடராஜர் தேர்,4வதாக  குற்றாலநாதர்தேர்,5வதாக  குழல்வாய்மொழி அம்மன் தேர் என 5 தேர்கள் ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று வடம் பிடித்து இழுத்தனர்.இதன் தொடர்ச்சியாக  4ம்தேதி காலை 9 மணிக்கு மேல் சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடந்தது. மேலும் திருவிழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கு மேலும், இரவு 7 மணிக்கு மேலும்  நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.
 

 

Tags :

Share via