திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

by Staff / 03-01-2023 01:47:05pm
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட அதிமுக அவை தலைவர் திரு. வி. க கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளில் அதிமுக மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சிவராஜ் திமுக பிரமுகர் ஒருவரால் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும், திமுக அரசை கண்டித்து கரூரில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம். ஆர். விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via