இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்கள்- கிராம குழந்தைகள் தவிப்பு.

by Editor / 07-01-2023 06:08:59pm
இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்கள்- கிராம குழந்தைகள் தவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டிடம் கட்டும் பணிகள் தொடக்காததாலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை என்பதால் பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

தமிழகம் முழுவதிலும் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணியில் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சுநம்பிக்கிணறு, ஓலைகுளம், கம்மப்பாட்டி, மும்மலைப்பட்டி, புதுக்கோட்டை, கோபாலபுரம், கோவிந்தம்பட்டி, முப்பிலிபட்டி, குமராபுரம், குப்பானபுரம், வாகைத்தாவூர், கரடிகுளம், இலந்தைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் 13 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்  சேதமடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாகியும் தற்பொழுது வரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான எவ்வித பணிகளும் தொடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது மட்டுமின்றி, பள்ளிகட்டிடங்களை அகற்றுவதற்கு முன்பு அங்கு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித மாற்று ஏற்பாடுகளையும் பள்ளிகல்வித்துறை செய்யமால் இடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தபட்ட பள்ளி ஆசிரியர்கள், பள்ளி இருக்கும் ஊர் மக்கள் தான் தங்களால் முடிந்த உதவிகளுடன் மாற்று இடங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். 
மஞ்சள்நம்பிக்கிணறு கிராமத்தில் அங்குள்ள கோவிலில் பள்ளி நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத்தினை செலவு செய்தும், ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன் தற்காலிக செட் அமைத்து எவ்வித பாதுகாப்பு இல்லமால் வகுப்புக்களை நடத்தி வருகின்றனர். கம்மாப்பட்டியில் இரு இடங்களில் வாடகை வகுப்பு எடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. ஓலைகுளத்தில் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் இட நெருக்கடியில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இட வசதி இல்லை என்பதால் வெளியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

இதே நிலை தான் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட பள்ளிகளில் நீடிக்கிறது. அது மட்டுமின்றி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என எவ்வித அடிப்படை வசதியும், எவ்வித பாதுகாப்பு இல்லாமல் வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். அது மட்டுமின்றி வாடகை வீடுகளுக்கும் ஆசிரியர்கள் தான் வாடகை பணம் கொடுத்து வரும் நிலை உள்ளது.

ஏற்கனவே கட்டிடம் இடிப்பதாக கூறி 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியை காலி செய்து விட்டனர். தற்பொழுது இடித்து 2 மாதங்களுக்கு மேலாகியும் எவ்வித கட்டி பணிகளும் தொடங்கவில்லை, மாற்று ஏற்பாடு எதுவும் செய்யவில்லை என்பதால், குழந்தைகளின் பதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அடிப்படை வசதிகள் கூட இல்லமால் குழந்தைகளும், ஆசிரியர்களும் மன உளைச்சலுக்குள்ளாகும் நிலை இருப்பதாகவும். ஏற்கனவே அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் நிலையில் இது போன்ற நிலையினால் மாணவர்கள் அரசு பள்ளியை விட்டு போகும் நிலை இருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கட்டிடங்களை இடிக்க திட்டமிட்ட போதே அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து, மாற்று ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டும், அவ்வாறு செய்யவில்லை என்பதால் இன்றைக்கு ஆசிரியர்களும், குழந்தைகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்பொழுது வரை பணிகள் தொடங்கப்படவி;ல்லை என்பது வேதனை அளிக்கிறது. எனவே அரவு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via