கோதுமை மாவு கிலோ ரூ.1500 மட்டுமே

by Staff / 10-01-2023 11:28:17am
கோதுமை மாவு கிலோ ரூ.1500 மட்டுமே

பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கோதுமை மாவு கிலோ ரூ.1500 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டு போதுமான கோதுமை இருப்பு வைக்காததே இந்த நிலைக்கு காரணமென அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து சில பகுதிகளில் அரசாங்கமே குறைந்த விலையில் கோதுமை வழங்கி வரும் நிலையில், அதை வாங்க முயன்று 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via