இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வருகை

by Staff / 11-01-2023 12:52:52pm
இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பேரவைக்கு வருகை

எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றாத சபாநாயகரை கண்டித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகார வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை மாற்றாததை கண்டித்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

 

Tags :

Share via