கடும் பனிப்பொழிவு அபாயம்

by Staff / 11-01-2023 03:00:00pm
 கடும் பனிப்பொழிவு அபாயம்

கடந்த சில நாட்களாக கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் டெல்லி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 2-4 டிகிரி பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். கடந்த 23 ஆண்டுகளில் இதுபோன்ற குறைந்த வெப்பநிலை பதிவாகியதில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை தொடரும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பனி மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via