தமிழகத்தில் பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

by Editor / 26-01-2023 07:03:58am
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கீழடுக்கு சுழற்சியால் தென்கிழக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வணி மண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via