மும்பையில் பேருந்து விபத்து

by Staff / 26-01-2023 02:38:03pm
மும்பையில் பேருந்து விபத்து

மும்பை நாசிக் நெடுஞ்சாலையில் கொடூர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் பேருந்து ஒன்று, சாலையில் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த 2 பேர் கீழே விழுந்தனர். மேலும் சாலையை கடந்துகொண்டிருந்த இரண்டு பேர் மீதும் அந்த பேருந்து மோதியது. இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து 5 நாட்களுக்கு முன் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories