பங்குச் சந்தை பீதியை எதிர்கொண்ட கௌதம் அதானி

by Staff / 02-02-2023 01:38:23pm
பங்குச் சந்தை பீதியை எதிர்கொண்ட கௌதம் அதானி

இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி இந்த வாரம் வரை ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்து, உலக பணக்காரர்கள் வரிசையில் 16வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நிலக்கரி, விமான நிலையங்கள், சிமென்ட் மற்றும் ஊடகங்கள் என்று வணிக சாம்ராஜ்யத்தை கொண்டுள்ள கெளதம் அதானிக்கு அடுத்தடுத்த சரிவு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்ட நிலையில், அதானி குழுமத்திற்கு கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ.7.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via