ஆவின் தினத்தையொட்டி நுகர்வோருக்கு சலுகை

by Staff / 03-02-2023 12:14:41pm
ஆவின் தினத்தையொட்டி நுகர்வோருக்கு சலுகை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் (ஆவின்) 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், ஆண்டுதோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ரூ. 250-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.10 பெறுமானமுள்ள ஐஸ்கிரீம், ரூ.500-க்கு மேல் ஐஸ்கிரீம் வாங்கும் நுகர்வோருக்கு ரூ.20 பெறுமானமுள்ள ஐஸ்கிரீம் இலவசமாக வழங்கப்படும். இந்த சலுகை சென்னையில் உள்ள ஆவின் பாலகங்களில் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும்.

 

Tags :

Share via