பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உயர்வு.

by Editor / 10-02-2023 08:21:23am
பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உயர்வு.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில்,சுரண்டை,தென்காசி,சிவகாமிபுரம் ஆகிய பகுதிகளில்  பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுகளுக்கு மாவட்டத்தில் விளையும் பூக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கு அதிகாலையிலேயே மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரள வியாபாரிகளும் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.இந்தநிலையில் பனியின் தாக்கம் காரணமாக விளைச்சல் குறைந்தளவே இருந்துவருவதால் நேற்று பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. நேற்று மல்லிகை, பிச்சி,முல்லை,ஆகிய பூக்களின் விலை  நேற்று ரூ. 2 ஆயிரம் ரூ.க்கு விற்பனையானது. மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு வருமாறு:கனகாம்பரம்-ரூ .600 சிகப்பு கோழி ரூ.80 - ரோஸ்-ரூ 200,அரளிப்பூ ரூ. 70,  வாடாமல்லி ரூ. 70, சிவப்பு கேந்தி ரூ. 60, சம்பங்கி ரூ. 150, பட்டன் ரோஸ் ரூ. 120, துளசி ரூ. 40, பச்சை ரூ. 8, கோழிப்பூ ரூ. 80, கொழுந்து ரூ. 70, மருக்கொழுந்து ரூ. 100, மஞ்சள் கேந்தி ரூ. 55, மஞ்சள் சிவந்தி ரூ. 70, வெள்ளை சிவந்தி ரூ. 100, தாமரை (100 எண்ணம்) ரூ. 1, 500, ரோஜா (100 எண்ணம்) ரூ. 20, ஸ்டெம்புரோஸ் ஒரு கட்டு ரூ. 400-க்கு விற்பனையானது. இன்று கடைசி வெள்ளி மற்றும் தை மாதத்தின் கடைசி முகூர்த்தநாள் என்பதால் பூக்களின் விலை மார்க்கெட் 10மணிக்குத்தொடங்கியபின்னர்தான் விலை உயர்வா..சரிவா ..எனத்தெரியும்.

 

Tags :

Share via