மதுரை - டெல்லி நிஜாமுதீன் ரயில் திண்டுக்கல் வரை இயக்கம்.

by Editor / 10-02-2023 10:01:23pm
மதுரை - டெல்லி நிஜாமுதீன் ரயில் திண்டுக்கல் வரை இயக்கம்.

மதுரை ரயில் நிலையத்தில் இரட்டைப் பாதை இணைப்பு பணிகளுக்காகபிப்ரவரி 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12651) மற்றும் பிப்ரவரி 14, 16, 21, 23 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை சம்பர்கிரந்தி விரைவு ரயில் (12652) ஆகியவை மதுரை - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ரயில்கள் பயணிகள் வசதிக்காக தற்போது திண்டுக்கல் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இருந்தும், திண்டுக்கல் வரையும்  இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via