ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர்.

by Editor / 30-09-2023 08:12:07pm
ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர்.

திருவாரூர் அருகே உள்ள தண்டலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதியில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குப்பை இல்லா இந்தியா என்கிற இலக்கினை அடைய தூய்மை சேவை இயக்கம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் கையுறைகளை அணிந்து தானே ஜாடியை பிடித்து குப்பைகளை அகற்றும் பணியை துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் குளத்தை சுற்றி குப்பைகளை அகற்றினர்.அப்போது ஆட்சியர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு நின்ற தண்டலை ஒன்றியக் குழு திமுக உறுப்பினர் முருகேசன் மாவட்ட ஆட்சியர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் இங்கு சரியாக குப்பைகளை எடுப்பதில்லை மேடம் என்று கூறினார்.அதற்கு மாவட்ட ஆட்சியர் நீங்கள் தான் குப்பையை சரியாக கொடுக்க வேண்டும் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் தான் அதை முறையாக அப்புறப்படுத்த முடியும் என்று கூறினார்.அதற்கு அவர் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு கவுன்சிலர் முருகேசன் என்னிடம் மேன் பவரை குடுங்க நான் செய்து காட்டுகிறேன் என்று மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருந்தார். இதனையடுத்து ஆட்சியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.ஆளுங்கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஒருவர் தூய்மை சேவை இயக்கம் திட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறை கூறியது மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

Tags : குப்பையை அள்ள ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர்.

Share via