ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

by Editor / 16-02-2023 02:57:13pm
ஈரோடு கிழக்குத் தொகுதி  திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிமனைகள் உரிய அனுமதியின்றி அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கல்லுக்கடை ராஜாஜி தெருவில் செயல்பட்ட திமுக பணிமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். 10 இடங்களில் திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், ஆலமரத்து தெருவில் உள்ள அதிமுக பணிமனை உட்பட மொத்தம் 4 அதிமுக பணிமனைகளுக்கு விதிமீறல் புகாரின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி  திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்
 

Tags :

Share via