இன்று மகாசிவராத்திரி- சனி பிரதோஷம்

by Admin / 18-02-2023 09:21:30am
இன்று மகாசிவராத்திரி- சனி பிரதோஷம்

மும்மூர்த்திகளில் முதன்மையானவர்.பிறப்பு இறப்பற்ற-அவதாரம் எடுக்காத முழு முதற்கடவுள் சிவனுக்கு உகந்த பொழுது
களில் சிவராத்திரி முக்கியமான நாளாகும்.அதனை அடுத்து பிரதேசம் மிக முக்கியமான வழிபாடாகும்.அந்தவகையில்
இன்று 18.2.2023  மகாசிவராத்திரியுடன் கூடிய பிரதேசம்.மகா சிவராத்தி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச
சதுர்த்தி தினத்தில்  இந்துக்களால் மேற்கொள்ளப்பெறும் விரததினமாகும்.இவ்விரதம் குறித்து புராணக்கதை வழி அறியலாகும் செய்தி....முன்னொரு காலத்தில்,உலகம் அழியும் பிரளயம்.அப்போது எல்லா ஜீவராசிகளும் சிவனை தஞ்சமடைந்தன.உலகமே இல்லா காலம்.இந்நிலையில் பார்வதிதேவி மீண்டும் அண்டசராசரங்கள் தோன்றி அனைத்து உயிர்களும் வாழ வழி வகை செய்ய ..இறைவனை வேண்டி தவம் மேற்கொள்ள.. அத்தவத்தின் பயனாக தன்னுள் அடைக்கலாம் ஆகியிருந்தஅனைத்து உயிர்களும் உயிர்த்தெழச்செய்தார்.அந்தபொழுதை சிவராத்தி விரதபொழுதாக மக்கள் கொண்டாடவேண்டும் .அவ்விரதம் கடைபிடிப்பவர்கள் தங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ அருள வேண்டும் என கேட்க.. சிவனும் அதற்கு ஆமோதித்து அருள் வழங்கிய தினமே சிவராத்தி தினமாகும். இந்நாளில் ,உலகம்முழுதுமுள்ள சிவாலயங்கள் சிறப்பு வழிபாடுகள் காலையிலிருந்து இரவு முழுதும் கொண்டாடப்படும்.சிவனை இன்று இரவு
கண்விழித்து விரதமிருந்து வழிபட்டால் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும்.
 

இன்று மகாசிவராத்திரி- சனி பிரதோஷம்
 

Tags :

Share via