லாரி ஓட்டுநர் தற்கொலை போலீசார் விசாரணை

by Staff / 24-02-2023 02:03:57pm
லாரி ஓட்டுநர் தற்கொலை போலீசார் விசாரணை

ஊத்துக்கோட்டை அடுத்த மேல்சிட்ரபாக்கத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தற்கொலை ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு.திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி, எல்லைக்குட்பட்ட மேல்சிட்ரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், வயது 43. லாரி ஓட்டுனர் இவர் கடந்த சில ஆண்டுகளாக புதிய லாரி வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.நிலையில் இவரின் தொடர் முயற்சி அடைந்ததால் மனமுடைந்த ஓட்டுனர் பாஸ்கர் நேற்று முன் தினம் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo