முன்னாள் ஜனாதிபதியின் கணவர் காலமானார்

by Staff / 24-02-2023 04:51:50pm
முன்னாள் ஜனாதிபதியின் கணவர் காலமானார்

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் காலமானார். இவருக்கு 89 வயது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷெகாவத் முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களாக உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த இவர், இன்று உயிரிழந்தார். இவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இவரது மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via