இளம் இயக்குனர் காலமானார்

by Staff / 27-02-2023 01:14:04pm
இளம் இயக்குனர் காலமானார்

திரையுலகில் அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். மலையாள இளம் இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் (31) காலமானார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜோசப், கேரளாவில் உள்ள மருத்துவமனையில் ஹெபடைடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 'நான்சி ராணி' படத்தின் மூலம் முழு இயக்குனராக மாறிய ஜோசப், படம் வெளியாவதற்கு முன்பே மரணமடைந்தார்.

 

Tags :

Share via