முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

by Editor / 01-03-2023 09:48:28am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via