கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

by Staff / 01-03-2023 11:34:27am
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

எரிவாயு நுகர்வோருக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில், கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 14.2 கிலோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.350.50 அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,068.50-ல் இருந்து தற்போது ரூ.1,118-ஐ எட்டியுள்ளது. எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றியமைக்கின்றனர்.

 

Tags :

Share via