கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

by Staff / 01-03-2023 11:59:46am
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எ.வ.வேலு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via