அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

by Staff / 04-06-2023 02:52:58pm
 அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கொளத்தூர் காமராஜர் நகரில் வசித்தவர் பழனி. அவருக்கும், அவரது தம்பி தமிழ்செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, தமிழ் செல்வன், கத்தியால் பழனியின் குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த பழனியின் மனைவி கவிதாவையும் தமிழ் செல்வன் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பழனி இறந்துவிட்டார்.இதையடுத்து தமிழ் செல்வனை கைது செய்த கொளத்தூர் போலீசார், அவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி விசாரித்தார். அரசு தரப்பில் மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி. தேவராஜன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் தமிழ் செல்வனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via