மதுரை பெண்  ரேவதி ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு

by Editor / 24-07-2021 04:12:05pm
மதுரை பெண்  ரேவதி ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு



மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணி இந்திய அணி சார்பாக ஒலிம்பிக் தடகள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர்.மதுரைசக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரேவதி வீரமணி. சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்தவர்.இவரது தங்கை ரேகா சென்னையில் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்துவரும் ரேவதி மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர்.


2019ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி தோஹாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆசிய சாம்பியனாகவும், தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றுவரும் மாநிலங்களுக்கு இடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியில், கடந்த ஜூன் 29ஆம் தேதி 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாம்பியனாகவும் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டுவரும் ரேவதி கூறும்போது,
 இந்த ஒலிம்பிக்கில் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பதக்கங்களை குவிப்பேன்.என்னைப் போன்று வளர்ந்துவரும் தடகள வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, நல்ல வாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து என்னைப் போன்றவர்களை ஊக்குவிக்கிறதுஎன்று கூறினார்.

 

Tags :

Share via