அதிக வட்டி தருவதாக கிராம பெண்களிடம் ஒரு கோடி மோசடி...

by Admin / 07-07-2021 04:15:30pm
அதிக வட்டி தருவதாக கிராம பெண்களிடம் ஒரு கோடி மோசடி...

அதிக வட்டி தருவதாக கிராம பெண்களிடம் ஒரு கோடி மோசடி...
 
 2014 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை மையமாக வைத்து செயல்பட்டு வந்த  "ஹெச்ஜிஎஸ்" என்ற தனியார் நிதி  நிறுவனத்தினர்,நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள  திருமருகல், திட்டச்சேரி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தங்களது பணியாளர்கள் மூலம் மேற்ப்படி கிராமங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மத்தியிலும்,கிராம பெண்களை அணுகி, மாதம்  500 ரூபாய் வீதம், 5 ஆண்டுகள் செலுத்தி வந்தால், முதிர்ச்சி அடைந்தவுடன்,30,000 ரூபாயுடன்  வட்டியாக 10,000 ரூபாயும், போனசாக 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 43,000 வழங்கப்படும் என ஆசை வார்த்தையை கூறி ஏஜெண்டுகளை நியமித்து 1000-க்கும் மேற்பட்ட ஏழை கூலித்தொழிலாளர்களிடம் ரூபாய்  1 கோடி  மேல் வசூல் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
 இதனையடுத்து கிராம பெண்கள் அனைவரும் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் தங்களது சேமிப்பு பணம் முதிர்ச்சி அடைந்ததை அடுத்து நிதி நிறுவனத்தை தொடர்பு பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் திட்டச்சேரி காவல் நிலையத்தில் தங்களின் பணத்தை நிதி நிறுவனத்திடம் இருந்து மீட்டு தர வேண்டும் என புகாரளித்துள்ளனர். நடவடிக்கையில்லையென்பதால் பணத்தை இழந்த பெண்கள் அனைவரும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க தங்களது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டியும்  தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டயும்  புகார் அளித்துள்ளனர்.

 

Tags :

Share via