நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி

by Staff / 15-03-2023 12:07:12pm
நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதி

அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்விழாவில் அவர் பேசுகையில்: நான் தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரகசியம் என்று குறிப்பிட்டதை தற்போது எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகின்றனர்.
பிரதமரை சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை நீட் தேர்வு ரத்து. திமுக சார்பில் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்பதே எனது நீட் தேர்வின் ரகசியம் என்று கூறினார். இதன்மூலம் உதயநிதி ஸ்டாலின் இதுவரை கூறிவந்த நீட் தேர்வின் ரகசியம் அரியலூரில் அவரால் வெளியிடப்பட்டது.

 

Tags :

Share via